567 கிமீ Range.! BYD-ன் பிரீமியம் மின்சார SUV இந்தியாவில் அறிமுகம்
சீன நிறுவனமான BYD-யின் பிரீமியம் மின்சார கூபே எஸ்யூவி Sealion 7 பிப்ரவரி 17-ஆம் திகதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த எலக்ட்ரிக் சார் சமீபத்தில் டெல்லியில் நடந்த Auto Expo 2025-வில் காட்சிப்படுத்தப்பட்டது.
Sealion 7 முழு சார்ஜில் 567 கிமீ வரை ஓடும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Premium மற்றும் Performance ஆகிய இரண்டு வகைகளில் வரும்.
Seal, Atto 3 மற்றும் eMax 7 மாடல்களைத் தொடர்ந்து Sealion 7 இந்தியாவில் அறிமுகமாகும் நான்காவது மாடல் ஆகும்.
BYD Sealion 7-இன் விலை ரூ.45 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மின்சார கார்களான Hyundai Ionic 5 மற்றும் KIA EV 6 ஆகியவற்றுடன் போட்டியிடும்.
பிப்ரவரி 17 வரை முன்பதிவு செய்தால் ரூ.70,000 தள்ளுபடியில் காரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தவிர, நிறுவனம் 7 ஆண்டு அல்லது 1.50 லட்சம் கிமீ உத்தரவாதம் மற்றும் இலவச installation, 7kW AC சார்ஜரை இலவசமாக வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BYD Sea Lion 7, BYD Sealion 7