496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல்
BYDயின் Yangwang கார் 496 கிலோ மீற்றர் சீறிப்பாய்ந்து உலகின் அதிவேக கார் எனும் வரலாறு படைத்தார்.
496.22 கிலோ மீற்றர்
சீனாவின் EV தயாரிப்பாளரான BYDயின் சொகுசு துணை பிராண்டான Yangwang, ஜேர்மனியில் உள்ள ATP Automotive Testing Papenburg சோதனைப் பாதையில் 496.22 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிப்பாய்ந்தது.
இதன்மூலம் அதிவேகமாக பயணிக்கும் உலகளாவிய உற்பத்தி-கார் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி Yangwangயின் சமீபத்திய U9 Xtreme ஹைப்பர் கார்தான் இந்த சாதனையை செய்தது.
அதிகபட்ச வேகம்
மேலும், ஒட்டுமொத்தமாக உலகின் வேகமான பெட்ரோல்-இயங்கும் மொடலின் அதிகபட்ச வேகத்தை எட்டியது.
அதேபோல் பொறியியலில் இந்த நவீன மைல்கல் மின்சார இயக்கத்தில் ஒரு புதிய தரத்தை அமைக்கிறது.
உலக சாதனை குறித்து BYD நிர்வாக துணைத் தலைவர் ஸ்டெல்லா லி கூறுகையில், "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள அனைவருக்கும் இது ஒரு நம்பமுடியாத பெருமையான தருணம்.
யாங்வாங் என்பது சாத்தியமற்றதை அங்கீகரிக்காத ஒரு பிராண்ட். முழு குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் வேகமான உற்பத்தி கார் இப்போது மின்சாரத்தில் இருப்பது மிகவும் அருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |