அடுத்தடுத்து நெருக்கடி... ஒரே ஆண்டில் ரூ 29,600 கோடியை இழந்த இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
இந்தியாவில் பல பில்லியன் டொலர் வர்த்தக சாம்ராஜியங்களை உருவாக்கிய பலர், தவறான சில முடிவுகளால் பின்னர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அப்படியான ஒருவர் தான் இந்தியாவின் ஸ்டார்ட்அப் நட்சத்திரமான பைஜூ ரவீந்திரன்.
உச்சம் தொட்ட பைஜூ ரவீந்திரன்
நினைத்துப் பார்க்க முடியாத அளவு வேகத்தில் உச்சம் தொட்ட பைஜூ ரவீந்திரன் தற்போது அதே வேகத்தில் சரிவையும் சந்தித்துள்ளார். 2022ல் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ 30,600 கோடி என இருந்தது.
ஆனால் தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு வெறும் ரூ 833 கோடி என்று கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒன்லைனில் கல்வி போதிக்கும் மிகப் பிரமாண்டமான எஜு-டெக் நிறுவனமான பைஜூஸ் சுமார் 22 பில்லியன் டொலர் சந்தை மதிப்பை மிகக் குறுகிய காலத்தில் ஈட்டியது.
இது இந்திய பணமதிப்பில் ரூ183,000 கோடியாகும். கேரள மாநிலத்தை சேர்ந்த பைஜூ மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் இணைந்து 2011ல் தான் பைஜூஸ் என்ற எஜு-டெக் நிறுவனத்தை நிறுவினர்.
படிப்பை கைவிட்டு மளிகை கடையில் வேலை பார்த்தவர்... இன்று அவரது தயாரிப்பை பயன்படுத்தும் 2.7 பில்லியன் மக்கள்
2023ல் பைஜூஸ் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. 22 பில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் உச்சத்தில் இருந்த இந்த நிறுவனம் தற்போது 95 சதவிகித இழப்பை எதிர்கொண்டு அக்டோபர் 2023ல் வெறும் 1 பில்லியன் டொலர் சந்தை மதிப்புக்கு சரிந்துள்ளது.
அமலாக்கத்துறை பைஜூ மீது வழக்கு
இந்திய பணமதிப்பில் ரூ 8290 கோடி. டிசம்பர் 2023ல் தமது குடியிருப்பு மற்றும் குடும்ப சொத்துக்களை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கடும் நெருக்கடிக்கு பைஜூ தள்ளப்பட்டார்.
மேலும், 2020 நிதியாண்டில் பைஜூஸ் நிறுவனம் ரூ 310 கோடி இழப்பை சந்தித்தது. 2021 நிதியாண்டில் அது ரூ 4560 கோடி என அதிகரித்தது.
மட்டுமின்றி, தமது நிறுவனத்தை முன்னெடுத்து நடத்த 1.2 பில்லியன் டொலர் கடன் வாங்கியதில் ரூ 9362.35 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பைஜூ மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |