ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திகதியை அறிவித்த தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, அங்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து , இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது தொகுதியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி குறைந்த பரப்பளவில் அதிக வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்டுள்ளது.
கடந்த 6-ம் திகதி (நேற்று) ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த சட்டமன்ற தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ல் நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |