கமலின் மநீம ஒரு தொகுதியில் கூட வெல்லாததற்கு இவர்கள் தான் காரணம்? இன்று கட்சியிலிருந்து விலகிய முக்கிய புள்ளி வெளியிட்ட பரபரப்பு கடிதம்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 133 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 2.45 விழுக்காடு வாக்குகளே பெற்றது.
தேர்தல் முடிவை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விலகினார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதி மநீம வேட்பாளராக ‘சென்னை தமிழச்சி' பத்மப்ரியா, நேற்று முருகானந்தம் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.
இந்நிலையில், இன்று கட்சியின் பொது செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது விலகல் குறித்து கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ‘2019-ல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி போனாலும், தமிழகத்தில் உங்களாலும் மக்கள் நீதிமய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் மீண்டும் இணைந்தேன்.
மக்கள் இடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது. கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை நான் கண்கூடாக பார்க்க முடிந்தது.
அதை தொடர்ந்து, மய்யத்திற்கு 'டார்ச்லைட்' சின்னம் மீண்டும் கிடைத்த போதும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த போதும், மக்கள் நீதி மய்யத்தின் மீதான அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.
ஆனால், இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமரவேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்த போதும், ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?
Entrepreneur K Kumaravel quits Kamal Haasan's Makkal Needhi Maiam for a second time in two years. pic.twitter.com/KRKtrmH5or
— D Suresh Kumar (@dsureshkumar) May 20, 2021
உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழிநடத்தலும் தான் காரணம். ஒரு தொகுதியில், வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான், மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது.
நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
வரலாறு படைப்பவர்களாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு.
தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்
ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியோக விலகுகிறேன்.
On a personal note, I want to thank-you profusely for all the love and affection you had shown me during my association with you, உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.