ஹரி-மேகன் தம்பதியை நூலிழையில் காப்பாற்றிய இந்திய வம்சாவளி ஓட்டுநர்: நடந்தது என்ன?
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஹரி- மேகன் தம்பதியினரை, புகைப்பட கலைஞரிடமிருந்து காப்பாற்றிய வாடகை கார் ஓட்டுநர், நடந்த சம்பவத்தினை விவரிக்கிறார்.
நியூயார்க் நிகழ்வு
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பிரித்தானிய அரச குடும்பத்தினரான இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மேகனுக்கு women of vision என்ற விருது வழங்கப்பட்டது.
@getty images
இந்த விழா முடிந்து தம்பதியினர் தங்களது குடும்பத்தோடு பயணித்த போது, பாப்பராசி என அழைக்கப்படும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களால் துரத்தப்பட்டுள்ளனர்.
சில வாகனங்கள் அவர்கள் சென்ற காரை துரத்தி, தம்பதியினரை புகைப்படங்கள் எடுக்க முயன்றுள்ளன. இச்சம்பவத்தில் அவர்கள் சென்ற வாடகை காரை ஓட்டிய இந்திய வம்சாவளியான சுக்சர்ன் சிங் என்பவர், வேகமாக காரை ஓட்டி துரத்துபவர்களிடம் இருந்து ஹரி-மேகன் தம்பதியினரை காப்பாற்றியுள்ளார்.
@mirror
இச்சம்பவத்தில் அவர் நியூயார்க் சாலைகளில் அதி வேகமாக கார் ஓட்டியதோடு, போக்குவரத்து விதிகளையும் மீறியுள்ளார்.
இந்திய வம்சாவளி ஓட்டுநர்
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் கார் ஓட்டிய சுக்சர்ன் சிங்கை, பிபிசி பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர்.
அதில் பேசிய அவர் ‘விழா நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு அதிகாரியின் உத்தரவின்படி, ஹரி-மேகன் குடும்பத்தினரை எனது வண்டியில் ஏற்றி கொண்டு அழைத்து சென்றேன்.
நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எங்களது வண்டியை பெரிய டிரக் மறைத்தது, அப்போது எங்களை துரத்தி வந்த, நிழற்பட கலைஞர்கள் அவர்களை போட்டோ எடுக்க துவங்கினர் .இதனால் ஹரி-மேகன் தம்பதியினர் பதற்றமடைந்தனர்.’
@gettyimages
'உடனே நான் காரை வேகமாக ஓட்டினேன், அவர்கள் எங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தார்கள், பின்னர் நான் வேகமாக ஓட்டி சென்று ஹரி-மேகன் தம்பதியினரை பாதுகாப்பாக கொண்டு போய் இறக்கிவிட்டேன் ’ என கூறியுள்ளார்.
டயானாவிற்கு ஏற்பட்ட விபத்து
இதனை தொடர்ந்து ஹரி-மேகன் இது போன்ற பாதுகாப்பற்ற பயணத்தில் ஈடுபட்டது தொடர்பாக, பக்கிஹாம் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது.
@afp
மேலும் ஹரியின் தாய் டயானா கடந்த 1977 ஆம் ஆண்டு, இதே போல் ஒரு சம்பத்தினால் தான் உயிரிழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் அரச குடும்பத்தின் செய்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.