முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்! இத்தனை நோயை தடுக்கும்
உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கும் ஒரு உணவு பொருள் தான் முட்டை கோஸ்.
கி.மு.200 -ஆம் ஆண்டில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. முட்டைகோஸ் சுவையானது மட்டுமல்ல! உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியதும் கூட..!
முட்டைகோஸில் உள்ள பலவித சத்துக்கள்
ஒரு கிண்ணம் முட்டைகோஸில் ஒரு நாளில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி யில் மூன்றில் ஒரு பாகம் கிடைக்கிறது. கோஸின் மேல்புறம் உள்ள பச்சை நிற இலைகளில் வைட்டமின் ஏயும் இரும்பு சத்தும் அதிகம்.
Diana Miller / Getty Images
கண்புரையை தடுக்கிறது.
வாரம் மூன்று முறையாவது முட்டை கோஸ் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
முட்டை கோஸில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.
அல்சைமர்
ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
healthline

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.