பிரித்தானிய மகாராணியாரின் மறைவால் பிரபல சாக்லேட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானிய மகாராணியாரின் மறைவால் பிரபல சாக்லேட்டில் மாற்றம் ஒன்று செய்யப்பட உள்ளது.
இந்த மாற்றம் சாக்லேட்டுக்கு மட்டுமல்ல, மொத்தம் 876 பொருட்கள் தங்கள் தயாரிப்புகளில் மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, கரன்சி முதல் பல்வேறு விடயங்களில் மாற்றங்களை உருவாக்க இருக்கும் நிலையில், பிரபல சாக்லேட் ஒன்றிலும் முக்கிய மாற்றத்தை உருவாக்க உள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவால், பிரபல பிரித்தானிய சாக்லேட் நிறுவனமான கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளின் உறையில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட உள்ளது.
image - alamy
கேட்பரி சாக்லேட்டின் உறையில், அது பிரித்தானிய மகாராணியாரால் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறும் எழுத்துக்களும், ராஜ முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளன.
மகாராணியார் மறைவையடுத்து அந்த முத்திரையை இனி கேட்பரி நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
image - alamy
இனி, மன்னரிடம் முறைப்படி விண்ணப்பித்து அவரால் அங்கீகாரம் பெற்று, புதிய முத்திரை மற்றும் எழுத்துக்களை கேட்பரி சாக்லேட் உறைகளில் பொறிக்கவேண்டியிருக்கும்.
இந்த மாற்றம், கேட்பரி சாக்லேட்டுக்கு மட்டுமல்ல, மொத்தம் 876 பொருட்களுக்கு இதேபோல ராஜ முத்திரை வழங்கப்பட்டுள்ளதால், அவர்களும் தங்கள் தயாரிப்புகளில் மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.