குழந்தை திருமணத்தை தடை செய்துள்ள கலிபோர்னியா; 32 அமெரிக்கா மாகாணங்களில் அனுமதி
california bans child marriage, still 32 us states allow minors to marry: 32 அமெரிக்கா மாகாணங்களில் குழந்தை திருமணத்திற்கு அனுமதி உள்ள நிலையில், கலிபோர்னியா தடை செய்வதாக சட்டமியற்றியுள்ளது.
குழந்தை திருமணத்தை தடை செய்துள்ள கலிபோர்னியா
உலகின் பல நாடுகளில் குறைந்த பட்ச திருமண வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், குறைந்த பட்ச திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இதையே குறைந்த பட்ச திருமண வயதாக வைத்துள்ளன.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அமெரிக்காவின் அனைத்து 50 மாகாணங்களிலும் குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக இருந்தது.
2018 ஆம் ஆண்டில் டெலாவேர் மற்றும் நியூ ஜெர்சி குழந்தை திருமணத்தை தடை செய்தன. இப்போது கலிபோர்னியாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
அமெரிக்காவின் 18வது மாகாணமாக கலிபோர்னியா, குழந்தை திருமணத்தை தடை செய்கிறது.

கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம், 18வயதுக்குட்பட்ட குழந்தைகளை திருமணம் செய்ய தடை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டார். 1 ஜனவரி 2027 முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
32 அமெரிக்கா மாகாணங்களில் அனுமதி
ஆனால், அமெரிக்காவில் இன்னும் 32 மாகாணங்களில் திருமணங்களுக்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்படாததால் அங்கு குழந்தை திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
ஆனால், பல மாகாணங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் 15,16 போன்ற வயதினை நிர்ணயம் செய்துள்ளது.

மேலும், 18 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்து பெறுவதற்கான எந்த வழிமுறையும் இல்லாததால், பல பெண்கள் தாங்கள் துன்புறுத்தும் மற்றும் சுரண்டும் உறவுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறுகின்றனர்.
16 வயதிலே குழந்தைக்கு தாயாகும் பெண்கள், கல்வியை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அமெரிக்கா முழுவதும் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போராடும் 'அன்செயின்ட் அட் லாஸ்ட்' என்ற குழு, கலிபோர்னியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9,000 சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், அந்த குழந்தை திருமணங்களில் ஏறக்குறைய அனைத்தும் வயதுவந்த ஆண்களுக்கே சிறுமிகளை திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.