மொத்தமாக புரட்டிப்போட்ட புயல்... வாகனத்துடன் பூமிக்குள் புதைந்த தாயாரும் மகளும்

Death California
By Arbin Jan 11, 2023 05:35 AM GMT
Report

கலிபோர்னியா மாகாணத்தை மொத்தமாக தாக்கிய புயலுக்கு நடுவே, சாலையில் பயணித்த தாயாரும் மகளும் திடீரென்று உருவான குழிக்குள் புதைந்து போன சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தில் புதைந்த தாயார், மகள்

அதிர்ஷ்டவசமாக, துணிவாக செயல்பட்ட மீட்புக்குழுவினரால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். திங்களன்று சுமார் 7.20 மனியளவிலேயே குறித்த சம்பவம் Chatsworth பகுதியில் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக புரட்டிப்போட்ட புயல்... வாகனத்துடன் பூமிக்குள் புதைந்த தாயாரும் மகளும் | California Storm Sinkhole Swallows Mother Daughter

@getty

சாலையில் திடீரென்று 15 அடி பள்ளம் உருவாகி, அதில் இரண்டு வாகனங்கள் சிக்கியுள்ளது. தாயாரும் மகளும் பயணித்த கார் ஒன்று, அந்த திடீர் பள்ளத்தை கவனிக்காததால், அதனுள் சிக்கியுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் பிக்கப் டிரக் ஒன்றும் இருவருடன் அந்த பள்ளத்தில் சரிந்துள்ளது. ஆனால் அந்த இருவரும் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு வந்து சேரும் முன்னர் பள்ளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஆனால் அந்த தாயாரும் மகளும், தங்கள் கார் மீது பிக்கப் டிரக் சரிந்ததால், சிக்கிக்கொண்டு, மீள முடியாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து சுமார் 50 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் இணைந்து, அந்த தாயாரையும் மகளையும் மீட்க போராடியுள்ளனர்.

முயற்சிகள் பலனளிக்காமல்

முதற்கட்டமாக அவர்கள் முன்னெடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளது. மட்டுமின்றி, பள்ளத்தில் வாகனங்கள் மேலும் புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஏணியுடன் குழிக்குள் இறங்கி, ஆபத்தான நிலையில் இருந்த வாகனத்தில் இருந்து தாயாரையும் மகளையும் காப்பாற்றியுள்ளனர்.

மொத்தமாக புரட்டிப்போட்ட புயல்... வாகனத்துடன் பூமிக்குள் புதைந்த தாயாரும் மகளும் | California Storm Sinkhole Swallows Mother Daughter

@reuters

இருவரும் லேசான காயங்களுடன் காணப்பட்டதால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செவ்வாய்க்கிழமை வரையிலும் அந்த வாகனங்கள் இரண்டும் பள்ளத்தில் இருந்து மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், சாலை நடுவே ஏற்பட்ட அந்த பள்ளத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அத்துடன், சாலையில் வழிந்தோடிய வெள்ளம் அந்த பள்ளத்தை நிரப்பும் வகையில் அமைந்தது. இதனால் அந்த இரு வாகனங்களும் மேலும் புதைந்துபோகும் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் புயலில் சிக்கி 14 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US