வகுப்பறையிலேயே ஆசிரியர் செய்த இழிவான காரியம்: வீடியோ எடுத்த மாணவர்
அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்த வீடியோ சீற்றத்தை தூண்டியது.
பாடசாலை ஆசிரியர்
அமெரிக்க மாகாணம் கலிபோர்னியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் டான் சாம்ப்.
வரலாற்று ஆசிரியரான இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அசோசியேட்டட் மாணவர் அமைப்பின் ஆலோசகரும் ஆவார். இவர் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத சமயத்தில் கொள்கலனில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை மாணவர் ஒருவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
உடனடி நடவடிக்கை
கடந்த பிப்ரவரி 25ஆம் திகதி, ஒரு பெற்றோரும் ஊழியர் ஒருவரும் இதனை பாடசாலை நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு, உடனடி நடவடிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியை அன்றே குடும்பங்களுக்குப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து சாம்ப் உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பப்பட்டார். ஆனால் மாவட்ட அதிகாரிகள் மேலும் ஒழுங்கு நடவடிக்கையை அறிவிக்கவில்லை. மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |