நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்: அனைவரும் ஒரே நாளில் பிறந்த ஆச்சரியம்
அமெரிக்காவில் பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை ஒரே நாளில் பெற்றெடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில்
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நௌஷே டிரேக் என்ற பெண், கடந்த 7ஆம் திகதி ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார்.
இது அவரது நான்காவது குழந்தையாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது குழந்தைகள் அனைவருமே 'ஜூலை 7ஆம் திகதி' பிறந்தனர் என்பதுதான்.
முதல் குழந்தையான கெவன் 2019ஆம் ஆண்டிலும், நா'ஸையலா 2021யிலும், கலன் 2022யிலும் பிறந்தனர். 4வதாக பிறந்த குழந்தைக்கு கைலோவா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கற்பனை செய்ய முடியவில்லை
இதுகுறித்து நௌஷே டிரேக் (Nauzhae Drake) கூறுகையில், "அவர்கள் (குழந்தைகள்) அனைவருமே ஒரே நாளில் பிறந்தது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோரும் என்னைச் சென்று லாட்டரி விளையாடச் சொன்னார்கள்.
பிரசவ வலி ஏற்படும்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்.
ஏனென்றால் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் பிறப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவை இயற்கையாகவே பிரசவிக்கப்பட்டன" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |