பயந்தது போலவே நடந்துவிட்டது... இளவரசிகளின் பட்டங்களையும் பறிக்க வலியுறுத்தல்
ராஜகுடும்பத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவரும் அவரது முன்னாள் மனைவியும் தாங்கள் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய பிள்ளைகளின் பட்டங்களையும் பறிக்க தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயந்தது போலவே நடந்துவிட்டது...
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.
ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவரும் அவரது முன்னாள் மனைவியும் தாங்கள் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் நிலை குறித்து அச்சம் தெரிவித்திருந்தார் சாரா.

இந்நிலையில், அவர் என்ன நடக்கலாம் என பயந்தாரோ, அதுவே நடந்துவிட்டது!
இளவரசிகளின் பட்டங்களையும் பறிக்க வலியுறுத்தல்

ஆம், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பட்டங்களையும் பறிக்க அழைப்பு விடுத்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ஆண்ட்ரூவின் பிள்ளைகளுடைய பட்டங்களைப் பறிக்கத் தவறுதல், பின்னர் அவர்கள் மோசமாக சோதனைக்குட்படுத்தப்பட்டு, கண்ணீருடனும், அவமானத்துடனும் நிற்கும் நிலையை உருவாக்கக்கூடும் என்கிறார் ராஜகுடும்ப நிபுணரான அமண்டா (Amanda Platell) என்பவர்.

கடைசியாக ஆண்ட்ரூவின் மகளாக பீட்ரைஸ் சவுதி முதலீட்டாளர்களுக்கு தேநீர் விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.
அதைப் பார்க்கும்போது, ராஜகுடும்பம் இப்படி ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டிருக்கும்போது, பீட்ரைஸ் ஒரு நாள் பணக்காரர்களின் உலகில் மூழ்கியிருந்துகொண்டு, மறுநாள் ராஜகுடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
ஏற்கனவே, ஆண்ட்ரூ பிரித்தானியாவுக்கான வர்த்தக தூதராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நண்பரும் கோடீஸ்வரருமான டேவிட் ரோலண்ட் (David Rowland) என்பவருக்கு பல மில்லியன் டொலர்கள் உதவி செய்ததாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ஆண்ட்ரூவின் மகளான பீட்ரைஸ் இத்தகைய முக்கிய பொறுப்புகள் வகிக்கக்கூடாது என்பது அவரது வாதம்.
ஆக, ராஜகுடும்பம், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு செய்யும் கருணைமிக்க ஒரே விடயம், அவர்கள் பட்டங்களைப் பறிப்பதாகத்தான் இருக்கமுடியும்.
அப்போதுதான் ராஜகுடும்பம் தப்பிப் பிழைக்கமுடியும் என்று கூறியுள்ளார் அமண்டா.
ஆக, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பட்டங்களுக்கும் ஆபத்து வரக்கூடும் என எதிர்பார்க்கலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |