பிரான்ஸ் பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி ஊளையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அதிகரிக்கும் எதிர்ப்பு
பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
மக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
பிரதமரை பேசவிடாமல் ஊளையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமலே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் பிரான்ஸ் பிரதமரான , Élisabeth Borne.
ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் ஊளையிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அத்துடன், ஓய்வு பெறு வயதை 64ஆக்க விடமாட்டோம் என்று கூறும் பதாகைகளை ஏந்தியவண்ணம் நின்றார்கள் அவர்கள்.
பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், பிரதமரை சபாநாயகர் பேச அழைக்க, அவரைப் பேசவிடாமல் ஊளையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்னர் தேசிய கீதத்தைப் பாடத்துவங்கினர்.
சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.