இனி Android போன்களில் இதை செய்ய முடியாது! கூகுள் அதிரடி அறிவிப்பு
கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான ஆதரவை கூகுள் திரும்ப பெறுகிறது.
இந்த நடவடிக்கை மே 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றம், ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும்.
இதன் காரணமாக பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வகையில், மே 11, 2022 ஆம் திகதி முதல் பில்ட்-இன் கால் ரெக்காடர் வசதி இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயனர்களால் கால் ரெக்காடிங் அம்சத்தை பயன்படுத்த முடியாது.
புதிய மாற்றங்கள் மூன்றாம் தரப்பு கால் ரெக்காடிங் செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது தவிர வழக்கமான கால் ரெக்காடிங் அம்சம் எவ்வித இடையூறும் இன்றி இயங்கும்.
அதாவது உங்கள் ஆண்ட்ராய்டு போனின் டயலரில் அழைப்பு பதிவு செய்யும் அம்சம் இயல்பாக நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் அழைப்பைப் பதிவு செய்யலாம். முன்பே நிறுவப்பட்ட அழைப்பு பதிவு செயலிகள் அல்லது சேர்க்கப்பட்ட அம்சங்களுக்கு அணுகல் அனுமதி தேவையில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது.