தொலைக்காட்சி நேரலையின்போது மனைவியை தொலைபேசியில் அழைத்த கணவர்: ஆண் குரல் கேட்டதால் ஏற்பட்ட அசௌகரியம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒருவர், நேரலையின்போது தன் மனைவியை தொலைபேசியில் அழைக்க, மறுபுறம் ஆண் ஒருவர் பேச, அசௌரியமான ஒரு சுழல் உருவானது.
Who Wants to be a Millionaire?
நம் ஊர்களில் தொலைக்காட்சியில் நடக்கும் குரோர்பதி, கோடீஸ்வரி என்பது போன்ற நிகழ்ச்சிகள் போன்று பிரித்தானியாவில் நடைபெறும் நிகழ்ச்சி, Who Wants to be a Millionaire? என்னும் நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்கன் (JP Morgan) என்னும் நபருக்கு ஜேர்மனி குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய நிலை வந்துள்ளது.
தன் மனைவியின் அத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில் வாழ்ந்தவர் என்பதால், 'Phone a Friend' என்னும் ஆப்ஷனில், உதவிக்கு தன் மனைவியை தொலைபேசியில் அழைத்தார் மார்கன்.
அப்போது ஆண் ஒருவர் தொலைபேசியில் பேச, தான் நேரலையில் இருக்கும்போது ஏதோ தவறு நடந்துவிட்டதோ என்று எண்ணி அசௌகரியமாக உணர்ந்தார் மார்கன். உடனே நிகழ்ச்சியை நடத்துபவர், ஒன்றும் அதிர்ச்சியடையாதீர்கள், பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
பின்னர் மார்கனுடைய மனைவியான எலிசபெத் அழைப்பில் வர, நிகழ்ச்சியை நடத்துபவர், உங்களுடன் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுள்ளார்.
தொலைபேசியில் பேசியது யார்?
மார்கனுடைய மனைவியை தொலைபேசியில் அழைத்தால், யாரோ ஆண் பேசுகிறாரே என அனைவரும் யோசித்துக்கொண்டிருக்க, அப்புறம்தான் தெரிந்தது, அது பதிவு செய்யப்பட்ட குரல் (Recorded voice) என்பது.
Image: ITV
அந்தக் குரல், ’மன்னிக்கவும், இப்போது தொலைபேசி சேவை இல்லை’ (I am sorry there is no service) என்று கூற, நிகழ்ச்சி நடத்துபவர் அதை யாரோ ஒரு ஆண் என்று எண்ணி Morganஐ டென்ஷனாக்கிவிட்டார். முக்கியமான விடயம் என்னவென்றால், சந்தேகம் தீர்ந்ததுடன், மார்கன் 64,000 பவுண்டுகளுடன் வீடு திரும்பினார் என்பதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |