குழந்தையைக் கொன்றதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்: தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
சுவிட்சர்லாந்தில், தனது காதலரின் குழந்தையைக் கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஒரு பெண்.
ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அவரது சட்டத்தரணிகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவிஸ் பெண்
சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில், தனது தனது காதலரின் இரண்டு வயது குழந்தையைக் கொலை செய்ததாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஒரு பெண்.
ஆனால், இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பெண்களை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவரது காதலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த நபர் முன்பின் யோசிக்காமல் முரட்டுத்தனமாக தாக்குபவர் என்றும் கூறப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது காதலியோ, தான் தன் காதலரின் குழந்தையைக் கொல்லவில்லை என ஆரம்பம் முதலே கூறிவருகிறார்.
வழக்கு விசாரணையின்போது, தங்களுக்கும் அந்த சந்தேகம் இருந்ததாக தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணிகள், அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |