கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொகைன் கடத்தல்: 24 வயது கேம்பிரிட்ஜ் நபர் கைது
கனடாவில் சர்வதேச கொகைன் கடத்தல் வலையமைப்பை சேர்ந்த முக்கிய நபர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் நபர் கைது
கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணையின் ஒரு பகுதியாக 24 வயது மதிக்கத்தக்க கேம்பிரிட்ஜ் இளைஞர் ஒருவர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26 ம் திகதி உள்ளூர் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்திய வலையமைப்பின் மூளையாக செயல்பட்டவர் என்று புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர் மீது Schedule I போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் குற்றச் செயலில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது இவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட பெண்

கொகைன் கடத்தல் வலையமைப்பு தொடர்பான கனேடிய பொலிஸாரின் விசாரணை கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. அப்போது ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த (ஜேட் என்று அடையாள பெயருடன் அழைக்கப்படும்) 20 வயது இளம்பெண் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உள்ளூர் மதிப்பு கிட்டத்தட்ட $18 மில்லியன் ஆகும்.
கைது செய்யப்பட்ட ஜேட், 4 மாதங்களில் பல்வேறு தனித்தனி விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்து கனேடிய கடத்தல்காரர்களுடன் பெரிய வலையமைப்பை ஏற்படுத்தி இருந்ததாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் தன்னுடைய பையில் போதைப்பொருள் இருந்தது தெரியாது என்றும், சர்வதேச அளவில் பார்சல்களை கொண்டு சேர்க்கும் பணிக்காக இணையத்தில் வெளியான விளம்பரத்திற்கு பதிலளித்தே இந்த வேலையில் சேர்ந்ததாகவும் ஜேட் W5 ஊடகத்திடம் பேசிய ஜேட் தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |