இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்... ரூ 130000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய கதை: யாரிந்த சிமோன் டாடா
சுவிட்சர்லாந்தில் பிறந்து, இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர் டாடா குடும்பத்தில் ஒரு அங்கமானதுடன், சமீபத்தில் ரூ 130000 சந்தை மதிப்புக்கு உயர்ந்த நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளார் பெண் ஒருவர்.
டாடாவின் அறிமுகம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பிறந்து வளர்ந்தவர் சிமோன். தனது 23வது வயதில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது ரத்தன் டாடாவின் தந்தை நவன் ஹோர்முஸ்ஜி டாடாவின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இருவரும் சில ஆண்டுகள் பழகிய நிலையில், 1955ல் முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் சிமோன் டாடா நிரந்தரமாக மும்பை மாநகரில் குடிபெயர்ந்தார்.
இந்த தம்பதிக்கு 1957ல் நோயல் டாடா பிறந்தார். நோயல் பிறந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் 1962ல் Tata Oil Mills, Lakme ஆகிய சிறிய நிறுவனங்களில் சிமோன் டாடா இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
நீண்ட 20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சிமோன் டாடா தலைமை பொறுப்புக்கு வந்தார். Lakme நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, அவரை டாடா குழுமத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது.
நோயல் டாடா தலைமையில்
8 ஆண்டுகளில் Lakme நிறுவனத்தின் அசுர வளர்ச்சியை அடுத்து, 1996ல் டாடா குழுமம் Lakme நிறுவனத்தை HLL நிறுவனத்திடம் விற்றது. அந்த தொகையை முதலீடாக கொண்டு Trent என்ற நிறுவனத்தை டாடா குழுமம் உருவாக்கியது.
இந்த நிறுவனத்தில் இருந்து தான் Westside உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. 2006 அக்டோபர் 30 வரையில் Trent நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் சிமோன் டாடா சேவையாற்றி வந்துள்ளார்.
நோயல் டாடா தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம் தான் சமீபத்தில் ரூ 130000 கோடி சந்தை மதிப்பை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |