ஒட்டகப்பால் சர்க்கரை நோயை குணமாக்குமா?
உடலில் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பயன்படுத்த இயலாது போன்ற பலனளிக்கும் நிலைமையின்போது இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இதை நாம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் என்கின்றோம்.
இதனால் இதய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், கண் நோய் என்பன ஏற்படலாம்.
எனவே சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
இந்த பதிவில் ஒட்டகப்பால் அருந்தினால் சர்க்கரை நோய் குணமாகுமா என்பது குறித்து பார்க்க போகிறோம்.
stylecraze
சர்க்கரை நோயை குணப்படுத்துமா?
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் முதல் கட்ட சர்க்கரை நோயாளிகளை இரண்டு குழுவாக பிரித்து ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு 500 ml ஒட்டகப்பாலை கொடுத்துள்ளனர்.
மற்ற குழுவில் உள்ளவர்களுக்கு ஒட்டகப்பாலை கொடுக்கவில்லை.
ஒட்டகப்பால் எடுத்துக்கொண்ட குழுவில் உள்ள நோயாளிகளுக்கு சராசரி இரத்த சர்க்கரையின் அளவு 120லிருந்து 93ஆக குறைந்திருக்கிறது.
HBA1C என்கின்ற 3 மாத சராசரி சர்க்கரையின் அளவு ஒட்டகப்பால் எடுத்துக்கொண்டவர்களுக்கு சராசரியாக 7.8 லிருந்து 5.4 ஆக குறைந்திருக்கிறது.
Herzindagi
இன்சுலின் டோஸ்யுடைய தேவை ஒரு நாளில் 32 யூனிட் அளவிலுருந்து 17 யூனிட் அளவாக குறைத்துள்ளது, மேலும் 3 பேருக்கு இன்சுலின் தேவையில்லை என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
இன்சுலினை நாம் ஊசியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்சுலினை மாத்திரையாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் உள்ள அமில நீர் மாத்திரையை கரைத்து விடும், மாத்திரையும் வயிற்றிலிருந்து இரத்தத்திற்கு செல்லாது எனவே மாத்திரை பலனளிக்காமல் போய்விடும். அதனால் தான் இன்சுலினை ஊசியாக மட்டும் பயன்படுத்துகிறோம்.
Medical news today
எனவே ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டகப்பால் குடிப்பதினால் சர்க்கரை நோய் முழுமாக குணமாகாது, இன்சுலின் தேவையை குறைக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஒட்டகப்பால் இரண்டம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படாது என்றும் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |