பிரெஞ்சு ஜனாதிபதி முகத்தில் முட்டை வீச்சு! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் வைரல் வீடியோ..
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முட்டையால் அடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், திங்கட்கிழமை மாலை லியோனில் (Lyon) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது, கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றபோது அவரது முகம் மற்றும் தோள்பட்டைக்கு இடையே ஒரு முட்டை வேகமாக வந்து மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை உடைந்து தெறிக்கவில்லை.
Picture: Denis Balibouse/Pool via AP
உடனடியாக அவர் அவரது மெய் காப்பாளர்களால் பாதுகாக்கப்பட்டார். மீண்டும் அவர் தாக்கப்படாமல் இருக்க பாதுகாவலர்கள் அவரை மறைத்துக்கொண்டனர். ஒருவர், தனது கையால் அவரது முகத்தையும் மறைத்துக்கொண்டார்.
அதே நேரத்தில், ஜனாதிபதியின் மீது முட்டையை வீசிய நபரை காவலர்கள் மடக்கிப்பிடித்தனர். மேலும், பாதுகாப்பு காரணத்திற்காக அந்த நபர் பாதுகாப்புப் படையினரால் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இவை அனைத்தும் பதிவான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
French President Emmanuel Macron was hit with an egg while he was visiting Lyon to promote French gastronomy https://t.co/KGg8devbjn pic.twitter.com/cLUDhfXl64
— Reuters (@Reuters) September 27, 2021
சம்பவ இடத்திலுள்ள செய்தியாளர்களிடம் பேசிய, மக்ரோன் முட்டையால் தாக்கப்பட்டது குறித்து பேசினார். "அந்த நபர் என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியது இருந்தால், அவர் நேராக என்னிடம் வரலாம்" என்று கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியின் மீது முட்டை வீசப்பட்டதன் நோக்கம் பற்றிய எந்த தகவலும் புதுப்பிக்கப்படவில்லை.
ஆனால், இதுபோல் பொது இடத்தில் திடீர் தாக்குதலுக்கு மக்ரோன் இலக்காக இருப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்ற போது ஒருவர், பிரெஞ்சு ஜனாதிபதியின் முகத்தில் அறைந்தார். தாக்குதல் நடத்தியவர் 4 மாத சிறைத்தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.