ரஷ்யாவின் 278 பில்லியன் பவுண்டுகளை இதற்காக பயன்படுத்தலாம்: வெளிவிவகார செயலாளர் டேவிட் கேமரூன்
போரினால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டை மறுசீரமைக்க ரஷ்யாவின் முடக்கப்பட்டுள்ள 278 பில்லியன் பவுண்டுகள் தொகையை செலவிட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
பில்லியன் கணக்கான தொகை
முன்னாள் பிரித்தானிய பிரதமரும் தற்போதைய வெளிவிவகார செயலாளருமான டேவிட் கேமரூன், அமெரிக்கா உறுதி அளித்துள்ள 88 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவியை உக்ரைனுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
@pa
மேலும், 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான தொகையை செலவிடவும் கூட்டு நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பெருந்தொகையை முடக்கி வைத்திருப்பதால் பலனேதும் இல்லை, அதில் இருந்து கொஞ்சம் நிதியை செலவிட அனுமதிக்க வேண்டும் என்றார். மேலும், அந்த நிதியை செலவிடுவதற்கு என்று முறையான பதிலையும் நாம் அளிக்க வேண்டும் என்றார்.
அனுமதி அளிக்க வேண்டும்
இந்த இக்கட்டான வேளையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனுக்கு உதவ முன்வராவிட்டால், அது விளாடிமிர் புடினுக்கு கிடைக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கும் என்றும் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
@getty
கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த டேவிட் கேமரூன், 88 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு முன்னெடுப்பதில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |