16 பவுண்டரிகளுடன் சதம் விளாசி அணியை காப்பாற்றிய அவுஸ்திரேலிய வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் சதம் விளாசினார்.
முதல் டெஸ்ட்
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெல்லிங்டனின் Basin Reserve மைதானத்தில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களும், உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களும் எடுத்து மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
Cameron Green is standing tall for Australia in the tough situation and against a quality opposition.
— CricketMAN2 (@ImTanujSingh) February 29, 2024
- The future superstar for Australia & RCB..!!! ⭐ pic.twitter.com/Z4TuSDNl90
பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மார்ன்ஸ் லபுஷேன் இருவரும் 1 ரன்னில் வெளியேறினர். முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கேமரூன் கிரீன் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
பவுண்டரிகளை விரட்டி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீன் அரைசதம் கடந்தார். இதற்கிடையில் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹென்றி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
கேமரூன் கிரீன் சதம்
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை ரச்சின், வில்லியம், குஃகெலேஜின் ஆகியோர் கைப்பற்றினர். ஆனாலும், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பமானமாக விளங்கிய கேமரூன் கிரீன் (Cameron Green) இரண்டாவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கிரீன் 16 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஓ ரௌர்கே (William ORourke) மற்றும் ஸ்காட் குஃகெலேஜின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Sensational from Cameron Green!
— cricket.com.au (@cricketcomau) February 29, 2024
A century in tough conditions lifts Australia to a strong total #NZvAUS pic.twitter.com/39HWca0dPf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |