ஐபிஎல் ஏலத்தில் ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்ட நட்சத்திர வீரர் பந்துவீச தடை! மும்பை அணிக்கு பேரிடி
ஐபிஎல் ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அவுஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்து வீசுவதற்கு தடை விதிப்பட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் திகதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அவுஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது.
sportskeeda
பந்து வீச தடை
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் திகதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.
வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேமரூன் கிரீன் தற்போதும் விளையாடாமல் தான் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்டில் விரலில் அடிபட்ட அவர், ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.