முதல் சதமே 47 பந்துகளில்! தென் ஆப்பிரிக்காவுக்கு 432 ரன் இலக்கு வைத்த அவுஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 431 ஓட்டங்கள் குவித்தது.
டிராவிஸ் ஹெட் 142 ஓட்டங்கள்
மெக்கேயில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 431 ஓட்டங்கள் குவித்தது.
Cameron Green turned down an easy single and then went 6, 6, 6! 😱 #AUSvSA pic.twitter.com/voNCrHoZcV
— cricket.com.au (@cricketcomau) August 24, 2025
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 142 ஓட்டங்களும், மிட்சேல் மார்ஷ் 100 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேமரூன் கிரீன் வாணவேடிக்கை காட்டினார். அவருக்கு துணையாக அலெக்ஸ் கேரி ஓட்டங்கள் சேர்க்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
முதல் ஒருநாள் சதம்
கேமரூன் கிரீன் (Cameron Green) 47 பந்துகளில் சதம் விளாசியதைத் தொடர்ந்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு முதல் ஒருநாள் சதம் ஆகும்.
மறுமுனையில் அலெக்ஸ் கேரி (Alex Carey) ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
வியான் முல்டர் 7 ஓவர்கள் பந்துவீசி 93 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். செனுரன் முத்துசாமி 75 ஓட்டங்கள் (9 ஓவர்கள்) கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |