கேமரூன் கிரீன் அடித்த சிக்ஸரால் ரூ.5 லட்சம் நன்கொடை - இந்த விதிமுறை தெரியுமா?
கேமரூன் கிரீன் நேற்று அடித்த ஒரு சிக்ஸரால் டாடா நிறுவனம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்க உள்ளது.
கேமரூன் கிரீன் சிக்ஸர்
ஐபிஎல் தொடரில் நேற்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணிகள் மோதியது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய KKR அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ஓட்டங்கள் குவிக்க, GT அணி 19.4 ஓவர்களில் 181 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KKR அணியில் அதிகபட்சமாக, கேமரூன் கிரீன் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 79 ஓட்டங்கள் குவித்தார்.
Making a strong statement 💪
— IndianPremierLeague (@IPL) April 17, 2026
Cameron Green getting a move on for #KKR 💜
Updates ▶️ https://t.co/FACeUzse3B#TATAIPL | #KhelBindaas | #GTvKKR | @KKRiders pic.twitter.com/utzOHFRbGx
இதில், அசோக் குமார் வீசிய 13.3ஆவது பந்தில், கிரீன் அடித்த சிக்ஸர், மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த விளம்பர காரில் மேல் பட்டது.
ரூ.5 லட்சம்
ஐபிஎல் தொடரின் விதிமுறைப்படி, வீரர்கள் அடிக்கும் பந்து இந்த காரின் மேல் பட்டால், அடித்தள கிரிக்கெட் மேம்பாட்டிற்காக ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 5 லட்சம் நன்கொடையாக வழங்கும்.

இந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.25.2 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன், இந்த தொடரின் முதல் 5 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
நேற்றைய போட்டியின் மூலம், அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |