கோல் மழை பொழிந்த அணிகள்! கத்தார் உலகக்கோப்பையில் அதிர்ந்த மைதானம்
கத்தார் உலகக்கோப்பையில் செர்பியா - கேமரூன் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என சமனில் முடிந்தது.
செர்பியா முன்னிலை
அல் ஜெனோப் மைதானத்தில் நடந்த போட்டியில் செர்பியா மற்றும் கேமரூன் அணிகள் மோதின. தங்கள் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கேமரூன் அணியின் ஜீன் சார்லஸ் கேஸ்டெல்லேட்டோ முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து செர்பியாவின் ஸ்ட்ரஹிஞ்சா பவ்லோவிக் 45+1வது நிமிடத்திலும், செர்கேஜ் 45+3 நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.
இதன்மூலம் முதல் பாதியில் செர்பியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
@FIFAWorldcup
கேமரூன் ஆதிக்கம்
அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் கேமரூன் அணி ஆதிக்கம் செலுத்தியது. செர்பிய வீரர் அலெக்ஸாண்டர் மித்ரோவிச் 53வது நிமிடத்தில் கோல் அடித்த நிலையில், கேமரூன் அணியின் வின்சென்ட் அபௌபகர் 63வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
@FIFAWorldcup
அடுத்த மூன்று நிமிடங்களிலேயே மற்றொரு கேமரூன் வீரர் எரிக் மாக்ஸிம் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் கூடுதலாக கோல் அடிக்காததால் ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.
The points are shared after a thrilling game!@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 28, 2022
கேமரூன் அணி உலகக்கோப்பையில் முதல் முறையாக 3 கோல்கள் அடித்துள்ளது. செர்பியா அணிக்காக அலெக்ஸாண்டர் மித்ரோவிச் கடைசி ஆறு ஆட்டங்களில் 7 கோல்கள் அடித்துள்ளார். போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
@Getty Images