கத்தார் உலகக்கோப்பையில் இளைஞரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த கால்பந்து ஜாம்பவான்! அதிர்ச்சி வீடியோ
கத்தார் உலகக்கோப்பை மைதானத்திற்கு வெளியே முன்னாள் கால்பந்து ஜாம்பவான் சாமுவேல் எட்டோவோ நபர் ஒருவரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாமுவேல் எட்டோவோ
Stadium 974 - ரஸ் அபு அபௌட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியை முன்னாள் கேமரூன் ஜாம்பவான் வீரரும், தற்போதைய கேமரூன் கால்பந்து நிர்வாகத்தின் தலைவருமான சாமுவேல் எட்டோவோ கண்டு களித்தார்.
போட்டி முடிந்ததும் வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது கமெரா வைத்திருந்த இளைஞர் ஒருவர் தன்னை வீடியோ எடுத்ததைப் பார்த்து கோபம் கொண்ட சாமுவேல், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டி அடிக்க சென்றார்.
முரட்டுத்தனமாக தாக்கிய சாமுவேல்
அதற்குள் அவரை தடுத்த சிலர் சமாதானப்படுத்த முயன்றனர். அதே சமயம் இன்னொரு நபர் குறித்த இளைஞரின் கமெராவை பறித்து கீழே போட்டார். அச்சமயம் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து வெளியே வந்த சாமுவேல், குறித்த இளைஞரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்தார்.
Samuel Eto’o golpea peligrosamente a una persona al final del partido entre Brasil y Corea https://t.co/smWcShJBYE pic.twitter.com/aXacvIHIdM
— La Opinión (@LaOpinionLA) December 6, 2022
இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதுதொடர்பான சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமுவேல் எட்டோவோ ஏன் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது குறித்து தெரியவில்லை.
@ Esra Bilgin/Anadolu Agency via Getty Images
ஜாம்பவான் வீரர்
கடந்த 1997ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட தொடங்கிய சாமுவேல், 2018-2019 ஆண்டுகளில் கத்தார் எஸ்.சி அணிக்காக கடைசியாக விளையாடினார்.
ஆப்பிரிக்கா கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர் சாமுவேல் எட்டோவோ. கேமரூன் அணிக்காக 56 கோல்கள் அடித்துள்ள சாமுவேல், தற்போது கத்தார் உலகக்கோப்பையில் மரபு தூதராக அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Reuters