இரகசிய காதலியிலிருந்து ராணி வரை... கமீலா எட்டிய உயரம்
காதலிலும், திருமண வாழ்விலும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல், தன் வாழ்வையும் சரியாக வாழாமல், இளவரசி டயானாவையும் வாழவிடாமல், வில்லி என்று பெயர் வாங்கிய கமீலா, பிரித்தானிய ராணியாக முடிசூடப்பட இருக்கிறார்.
தவறான முடிவுகளால் பிரிந்த குடும்பங்கள்
ஒருமுறை இளவரசர் சார்லசை காதலித்து, சரியான முடிவெடுக்கத் தெரியாமல், வேறொருவரைத் திருமணம் செய்து, சார்லசுக்கு திருமணமான நிலையிலும் அவருடன் தொடர்பு வைத்து, அதனால் இரண்டு திருமணங்கள் உடைந்து, பிள்ளைகள் பாதிக்கப்பட்டு, கடைசியில் டயானா அகால மரணமடைந்து, இப்படி ஒரு காதல் தேவையா என பிரித்தானிய மக்கள் கமீலா மீது எரிச்சலடைந்திருந்தார்கள்.
Photograph: Stefan Rousseau/PA
ஆனால், சார்லஸ் கமீலாவின் திருமணம் நடைபெற்றபோது, தன் மீது மகாராணியார், டயானாவுக்குப் பிறந்த வில்லியம், ஹரி, பிரித்தானிய மக்கள் என அனைவருமே வெறுப்பில் இருப்பதை நன்கறிந்திருந்த கமீலா, புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தார்.
Photograph: Shutterstock
ஆம், வேல்ஸ் இளவரசரான சார்லசை திருமணம் செய்ததால் கமீலா வேல்ஸ் இளவரசி ஆகவேண்டும். ஆனால், மக்கள் அந்த பட்டத்தை ஏற்கனவே இளவரசி டயானாவுக்குக் கொடுத்துவிட்டார்கள். அதை, தான் பறித்துக்கொண்டால், மக்களுடைய வெறுப்பு மேலும் அதிகமாகும் என்பதை நன்கறிந்த கமீலா, தன்னை வேல்ஸ் இளவரசி எனஅழைக்காமல், இளவரசர் சார்லசின் மற்றொரு பட்டமான Duke of Cornwall என்பதை பயன்படுத்தி, Duchess of Cornwall என்றே அறியப்பட்டார்.
Photograph: WPA/Getty Images
இரகசிய காதலியிலிருந்து ராணி வரை
சார்லஸ் மீது கமீலா வைத்திருந்த காதலும், கமீலா மீது சார்லஸ் வைத்திருந்த காதலும், தன் மகனுக்கு கமீலா நல்ல மனைவியாக இருப்பார் என்ற மகாராணியாரின் நம்பிக்கையும் இன்று கமீலாவை ராணியாக உயர்த்தியுள்ளது.
டயானா மறைந்து, கமீலாவும் தன் கணவரைப் பிரிந்த பின், சார்லசின் தனிச்செயலரான Mark Bolland என்பவருடைய முயற்சியின்பேரில் 1999ஆம் ஆண்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சார்லசும் கமீலாவும் வெளியே வரும் காட்சி ஊடகங்களை எட்டியது.
Photograph: PA
இருவரையும் சேர்த்துப் பார்த்தால் மக்கள் எப்படி ரியாக்ட் செய்வார்களோ என்ற அச்சம் இருந்தது உண்மைதான் என்றாலும், மக்கள் கொந்தளிக்கவில்லை.
பின்னர், மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கினார் கமீலா. அடுத்து, இளவரசர் வில்லியமுடன் ஒரு சந்திப்பு. அதைத் தொடர்ந்து, மகாராணியாருடன் ஒரு சந்திப்பு என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, மகாராணியார் தன் வாயால், இனி கமீலாவை ராணி என அழைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு, இப்போது ராணியாக முடிசூடப்படவே இருக்கிறார் கமீலா.
Photograph: Alastair Grant/AP
மகாராணியாரைப் பொருத்தவரை, மூக்கில் கோபம் இருக்கும் தன் மகனுக்கு ஒரு மூக்கணாங்காயிறு கமீலாதான் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
சார்லஸ் மன்னரானதும் வட அயர்லாந்து சென்றிருந்தபோது கையெழுத்திட பேனா ஒன்றை எடுக்க, அதிலிருந்து மை கசிய, கோபமான அவரை அமர்த்தியது கமீலா என்பதை உலகமே பார்த்தது. ஆக, சார்லசுக்கு அமைதியைக் கொடுக்கும் ஒரு பெண்ணாக கமீலா இருப்பார் என்னும் மகாராணியாரின் எண்ணத்தையும் உண்மையாக்கிவிட்டார் கமீலா.
Photograph: Heathcliff O’Malley/Daily Telegraph/PA