வாழ்க்கையின் மிகப்பெரிய நாள்... ராணியார் கமிலா அணிந்திருந்த உடையில் ரகசிய பெயர்கள்
முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த வெள்ளை உடையில் சில ரகசிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தற்போது வெளியிட்டுள்ளனர்.
வெள்ளை உடையின் சிறப்பு
குறித்த உடையில், இன்னொரு முக்கிய நபராக ராணியார் கமிலாவின் வளர்ப்பு நாய்க்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 75 வயதான ராணியார் கமிலா தமது வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் அணிந்திருந்த வெள்ளை உடையின் சிறப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
@PA
அந்த உடையில் தமக்கு மிக நெருக்கமான நபர்கள் சிலரின் பெயர்களை பொறித்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதாவது தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பெயர்களை ராணியார் கமிலா தமது வெள்ளை உடையில் பொறித்திருந்துள்ளார்.
அதில், தமது பிள்ளைகளான டாம் மற்றும் லாரா ஆகியோரின் பெயர்களும் அத்துடன் ஐந்து பேரப்பிள்ளைகளின் பெயர்களும் ரகசியமாக பொறிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, சார்லஸ் மற்றும் கமிலாவின் மீட்பு நாய்கள் பெத் மற்றும் புளூபெல் ஆகியவையின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.
Credit: Backgrid
முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலாவின் பேரப்பிள்ளைகளுக்கும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தது.
மறைந்த இளவரசி டயானாவுடன் பணியாற்றிய Bruce Oldfield என்பவரே கமிலாவின் ஆடையை வடிவமைத்துள்ளார்.