தேனிலவன்றே இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண வாழ்வில் நுழைந்த கமீலா...
இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியினருக்கிடையே பிரச்சினை இருந்ததை உலகமே அறியும்...
ஆனால், திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்ற அன்றே தம்பதியருக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
திருமணம் முடிந்து பிரிட்டானியா என்ற படகில் தங்கள் தேனிலவுக்காக சென்றிருந்தார்கள், இளவரசர் சார்லசும், இளவரசி டயானாவும்.
அப்போதே தம்பதியரின் வாழ்வில் பிரச்சினையாக உள்ளே நுழைந்துவிட்டார் கமீலா!
ஆம், தன் கணவர் சார்லஸ் அணிந்திருந்த சட்டையின் கை பொத்தானில் (cufflinks) C என்ற எழுத்துக்கள் பொறித்திருந்தன. ஏற்கனவே கமீலாவைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த டயானா, சார்லசிடம், இவை கமீலா கொடுத்தவை இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.
உடனே சார்லஸ், ஆம், அதிலென்ன தவறு? அவை ஒரு நண்பர் கொடுத்த பரிசு என்று கூற, தேனிலவுக்குச் சென்ற இடத்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியுள்ளது.
அதேபோல, தம்பதியருக்கு வந்த திருமணப் பரிசில், ஒரு பிரேஸ்லெட் இருந்திருக்கிறது. அதில் Gladys மற்றும் Fred என்ற பெயர்களின் சுருக்கமாக GF என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்திருக்கிறார் டயானா.
Credit: Alamy
Gladys என்பது கமீலாவை சார்லசும், Fred என்பது சார்லசை கமீலாவும் செல்லமாக அழைக்கும் பெயர்கள். அவர்கள் இருவரும் காதலித்த காலகட்டத்தில் அப்படித்தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்வார்களாம்.
ஆக, சார்லஸ் டயானா தம்பதியருக்கு வெளி உலகத்தைப் பொருத்தவரை பிரம்மாண்டமாக திருமணம் நடந்தாலும், தேனிலவிலேயே அவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது எனலாம். எங்கள் திருமண வாழ்வில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்று பின்னர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதுபோல, தேனிலவன்றே தம்பதியருக்கு நடுவே நுழைந்துவிட்டிருக்கிறார் கமீலா!
EXPRESS NEWSPAPERS//GETTY IMAGES