கமிலாவுடன் நல்ல நட்புடன் இன்னும் இருக்கும் அவரின் முதல் கணவர்! எதிர்காலத்தில்... கசிந்த முக்கிய தகவல்
ராணி எலிசபெத்தின் உறவினர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அரச குடும்பத்தின் சார்பில் அவரின் இறுதிச்சடங்கில் கமிலாவின் முன்னாள் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்படி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உறவினர் ஜான் பவுஸ் லயன் என்பவர் சமீபத்தில் தனது 80வது வயதில் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தின் சார்பில் கமிலாவின் முன்னாள் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் கலந்து கொண்டிருக்கிறார்.
கமிலாவுக்கும், ஆண்ட்ரூவுக்கும் கடந்த 1973ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1995ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தம்பதி பிரிந்துவிட்ட போதிலும், இன்னும் நல்ல உறவுமுறையில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஆண்ட்ரூ மேலும் அரச கடமைகளை செய்ய அழைக்கப்படலாம் என்றும் நண்பர்கள் பரிந்துரைத்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ரூவின் நண்பர் ஒருவர் கூறுகையில், கமிலாவுடன் இன்னும் நல்ல நட்பில் ஆண்ட்ரூ இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
AP