ராணி கமிலா மலைபோல் நம்பும் 4 பெண்கள்! மன்னருக்கான வேலையையும் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் குழு
மன்னருக்கான வேலையை செய்து முடிக்க, ராணி கமிலா தனது புருவத்தை பாதி உயர்த்தினாலே போதும் என்று கூறப்படுகிறது.
ராணி கமிலா தன்னுடன் இருக்கும் 4 பெண்கள் கொண்ட ஒரு குழுவை வைத்தே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறார்.
குயின் கன்சார்ட் கமிலா, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான வேலையையும் எளிமையாக செய்ய உதவும் நம்பிக்கையான நான்கு பேரை கொண்ட ஒரு குழுவை கொண்டுள்ளார்.
ராணி கமிலா Cornwall இளவரசியாக இருந்த காலத்திலிருந்தே அந்த பெண்கள் குழுவை அதிகம் நம்பியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் மேசைக்கு வரும் வேளைகளில், எந்த ஒரு அரசவைக்காரரும் செய்ய முடியாத கடினமான வேலையையும், ராணி கமிலா தனது புருவத்தை பாதி உயர்த்தினாலே செய்து முடிக்க முடியும்.
TIM ROOKE/SHUTTERSTOCK
ராணி இரண்டாம் எலிசபெத் இப்போது இல்லை என்பதால் அல்ல, அதற்கு முன்பே இந்த நம்பகமான பெண்கள் குழு கமிலாவிற்கு பக்கபலமாக இருந்துள்ளது என்று மூத்த அரச ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
"இறுதியில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உறவுகளை நிர்வகிப்பதும், சுமூகமாக்குவதும், மேம்படுத்துவதும் பெண்களே. மன்னர் தன்னைச் சுற்றியுள்ள வலிமையான பெண்களை விரும்புகிறார், பாராட்டுகிறார். 'இதை என்னிடமே விட்டுவிடு' என்று மனைவி கமிலா சொன்னால் போதும், அது கிட்டத்தட்ட நல்லபடியாக நடந்துவிட்டது என்பதாகும். எந்தத் தவறும் நடக்காது, கமிலா இதுவரை எதற்கும் தனது குரலை உயர்த்தாமலே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே எல்லாவற்றிலும் வலிமையானது மற்றும் நம்பகமானது" என்று அவர் கூறினார்.
DAVE J HOGANGETTY IMAGES
கமிலாவின் குழுவில் உள்ள நான்கு முக்கிய பெண்களில் அவரது தனிப்பட்ட செயலாளரான சோஃபி டென்ஷாம் (Sophie Densham), அவரது துணை பெலிண்டா கிம் (Belinda Kim), அவரது சகோதரி அனாபெல் எலியட் (Annabel Elliot) மற்றும் பெண்ணியவாதி ஜூட் கெல்லி (Jude Kelly) ஆகியோர் அடங்குவர்.
டெய்லி மெயிலில் வெளியான செய்தியின்படி, ஒரு மூத்த அரச ஆலோசகர் இது குறித்த தகவல்களை வெளியிட்டார்.