மன்னரின் முடிசூட்டு விழாவில் ஹரி-மேகன் தம்பதியை கட்டாயம் எதிர்பார்க்கும் ராணி கமிலா! காரணம்?
இளவரசர் ஹரியும் மேகனும் தவிர்க்காமல் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு வந்தால் அரச குடும்பத்தில் சில விரிசல்கள் சரியாகலாம் - கமிலா நம்பிக்கை.
மன்னர் சார்லஸ் தனது பேரனின் பிறந்தநாளில் தனது முக்கிய நாளும் அமையட்டும் என நினைக்கலாம்.
குயின் கன்சார்ட் கமிலா, மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறார் என்று அரச நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
அரச குடும்பத்தில் நிலவும் விரிசல்களுக்கு ஹரி-மேகன் தம்பதியின் வருகை ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று குயின் கன்சார்ட் கமிலா கருதுவதாக பிரித்தானிய அரச குடும்ப நிபுணர் Katie Nicholl கூறுகிறார்.
அரச குடும்பத்திற்குள் இருக்கும் பிளவு, அரச குடும்ப உறுப்பினர்களின் இதயத்தில் ஏற்பட்டுள்ள பிளவு என, இளவரசர் ஹரிக்கும் அவரது தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் இடையே ஏற்பட்டுள்ள பிளவுகளை குறிப்பிட்ட Katie, இது போன்ற பல பிரச்சினைகள் முடிசூட்டுவிழாவில் ஹரி-மேகன் தம்பதி வருகையால் சரியாகலாம் என்று பலரும் நம்புவதாக அவர் கூறினார். அதே நேரம், இது நடக்குமா என்ற கேள்வியும் பலருக்கு உள்ளது.
2023, மே 6 அன்று இளவரசர் ஹரியும் மேகன் மார்க்கலும் சார்லஸின் முக்கியமான தினத்தில் கலந்து கொள்வதில் கமிலா மிகவும் ஆர்வமாக இருந்தாலும், இறுதியில் ""இது ஹரி-மேகன் எடுக்கும் முடிவாக இருக்கும்" என்று அரச நிபுணர் சுட்டிக்காட்டினார்.
நிபுணர் Katie Nicholl, தி நியூ ராயல்ஸ் என்ற எனது புத்தகத்தில், திரைக்குப் பின்னால், இந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க கமிலா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளார், மேலும் இந்த பிளவிலிருந்து முன்னேற முயற்சிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஹரி மற்றும் மேகன் முடிசூட்டு விழாவில் மன்னர் சார்லஸை போலவே கமிலாவும் மிகவும் மகிழ்ச்சியடைவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Getty Images
விருந்தினர் பட்டியலில் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விவரங்களையும் பெறவில்லை, ஆனால் ஹரியும் மேகனும் மற்ற மூத்த மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்படுவார்கள் என்று கேள்விப்படுவதாக நிபுணர் Katie Nicholl கூறியுள்ளார்.
ஹரி-மேகனை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு விடயம் என்றால் அவர்களின் மகன் ஆர்ச்சியின் 4-வது பிறந்தநாள் ஆகும், இது முடிசூட்டு விழாவின் அதே நாளில் வருகிறது.
ஆனால், கேட்டி இந்த நிலைமையை மகிழ்ச்சியான தற்செயல் என்று கூறுகிறார். ஏனெனில் தனது பேரனின் பிறந்தநாளில் தனது முக்கிய நாளும் அமையட்டும் என மன்னர் நினைக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
இது, சார்லஸின் முடிசூட்டு விழாவின் திகதி அவரது இளைய மகன் கலந்து கொள்வதைத் தடுக்க வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு பதிலாகவும் அமைகிறது.