ஹரியும் மேகனும் அரச குடும்பத்திற்கு திரும்பவேண்டும்: கமிலா விருப்பம்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதிக்கு நல்லிணக்கத்திற்கான கதவை குயின் கன்சார்ட் கமிலா திறந்துள்ளார்.
ராயல் நிபுணரும் வாழ்க்கை வரலாற்றாளருமான ஏஞ்சலா லெவின் ஒரு பேட்டியில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரையும் அரச குடும்பத்திற்கு திரும்பவேண்டும் என மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி, குயின் கன்சார்ட் கமிலா (Queen Consort Camilla) விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களை கைவிடக்கூடாது, அவர்கள் மதிக்கப்படுவது முக்கியம் என்று என்று குயின் கன்சார்ட் கமிலா நம்புகிறார் என்று அரச எழுத்தாளர் ஏஞ்சலா லெவின் கூறினார்.
ஹரி மற்றும் மேகன் அவர்கள் செய்யும் விதத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறியதுடன், அவர்களுக்கும் அரச குடும்பத்திற்கும் இடையில் இருக்கும் பிளவுக்கான தீர்வையும் ஏஞ்சலா லெவின் பரிந்துரைக்கிறார்.
அதற்கு, ஹரியம் மேகனும் தங்களைப் பற்றி மட்டுமே நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
"அவர்கள் அரச குடும்பத்தை நசுக்கி அடித்து நொறுக்க விரும்புகிறார்கள் என்று நான் இன்னும் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
கமிலாவின் அணுகுமுறை பற்றி கூறிய லெவின், "ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தையை நேசிக்க முடியும் என்பதை அவர் (கமிலா) புரிந்துகொண்டார், ஆனால் அவர்கள் செய்வதை உண்மையில் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
CHRIS JACKSON/GETTY IMAGES
இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பத்து நாள் துக்க காலம் முழுவதும் பங்கேற்றனர்.
அதையடுத்தும் அவர்களுக்கு அரச குடும்பத்திற்கும் இடையில் உறவுகள் நல்ல முறையில் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அரச குடும்ப இணையதளத்தில் கடைசி இடத்திற்குத் தரமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.