கமீலாவை ராணி என அழைக்கக்கூடாது: பிரித்தானியர்கள் எதிர்ப்பு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நெருங்கிவரும் நிலையில், அவரது மனைவியாகிய கமீலாவை ராணி என அழைப்பதற்கு பிரித்தானியர்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராணி கமீலா
கமீலா சார்லசைத் திருமணம் செய்ததையே ஜீரணிக்க முடியாத ஒரு கூட்டம் மக்கள் இப்போதும் உண்டு. குறிப்பாக, டயானா கொல்லப்பட்டபின், அவரது இடத்தை கமீலா எடுத்துக்கொண்டதாக கருதுவோர் இருக்கிறார்கள், இளவரசர் ஹரி உட்பட!
இந்நிலையில், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா அழைப்பிதழில், ராணி கமீலா என கமீலா குறிப்பிடப்பட்டுள்ளார்.
அதாவது, மகாராணியார், மரணமடைவதற்கு முன், கமீலாவை மன்னரின் மனைவியாகிய ராணி, அதாவது, Queen Consort என அழைக்கவேண்டும் என கூறியிருந்தார். ஆனால், அழைப்பிதழில் கமீலா, ராணி, அதாவது Queen என குறிப்பிடப்பட்டுள்ளார்.
மக்கள் எதிர்ப்பு
இதற்கிடையில், கமீலாவை ராணி என அழைக்கக்கூடாது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் மக்கள் தெரிவித்துள்ளனர். 1,569 பிரித்தானியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 36 சதவிகிதம் பேர் கமீலாவை ராணி என அழைக்கக்கூடாது, Queen Consort என்றுதான் குறிப்பிடவேண்டும் என்று கூறியுள்ளனர்.
23 சதவிகிதம் பேர் கமீலாவுக்கு பட்டமே இருக்கக்கூடாது என்றும், 16 சதவிகிதம் பேர், கமீலாவை கார்ன்வால் கோமகள் என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியுள்ளனர்.
Image: Getty Images
14 சதவிகிதம் பிரித்தானியர்கள் மட்டுமே, கமீலாவை ராணி என்று அழைக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், மகாராணியார் உயிருடன் இருக்கும்போது அவரையும் ராணி என்று அழைத்து, கமீலாவையும் ராணி என அழைக்கமுடியாததால்தான் கமீலா Queen Consort என அழைக்கப்பட்டார் என்றும், இப்போது அவர் மன்னர் சார்லசின் மனைவி என்பதால், அவரை ராணி என அழைக்கத் துவங்குவற்கு இதுதான் சரியான நேரம் என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
Image: PA