இளவரசர் ஹரி தன் தந்தையை சந்திக்க விடாமல் தடுக்கும் கமீலா: காரணம் இதுதான்
தன் இளைய மகனான ஹரி மீது மன்னர் சார்லசுக்கு பாசம் குறைந்ததுபோல தெரியவில்லை. அவர் இன்னமும் மகனை சந்திக்கத் தயாராகத்தான் இருக்கிறாராம்.
ஆனால், ராணி கமீலாதான் ஹரி தன் தந்தையை சந்திக்கவிடாமல் தடுக்கிறாராம்.
காரணம் இதுதான்
ஹரி தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திக்கவிடாமல் கமீலா தடுப்பதற்கான காரணம் இதுதானாம்.
அதாவது, மன்னர் சார்லஸ் ஏற்கனவே புற்றுநோயால் அவதியுற்றுவரும் நிலையில், அவருக்கு மன அழுத்தம் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஹரி மன்னரை சந்திக்கவிடாமல் தடுக்கிறாராம் கமீலா.
அத்துடன், மன்னருடைய ஆலோசகர்கள் சிலரும், ஹரி மன்னரை சந்திப்பது தொடர்பில் எச்சரித்துள்ளார்களாம்.
இந்த தகவலை, ராணி கமீலாவின் தோழி ஒருவர் கூறியதாக Daily Beast என்னும் பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |