அந்த ஒற்றை ஆபரணம்... அடம் பிடிக்கும் கமிலா: கோபத்தில் தகிக்கும் இளவரசர் வில்லியம்
பிரித்தானியாவின் ராணியார் கமிலா, முடிசூட்டு விழாவிற்கு சர்ச்சைக்குரிய அரச குடும்ப நகை ஒன்றை பயன்படுத்தி இளவரசர் வில்லிம் கோபத்தை சம்பாதிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கமிலா பயன்படுத்த முடிவு செய்துள்ள ஒரு நகை
பிரித்தானிய மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவானது மே 6ம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பாரம்பரிய சடங்குகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன், ராஜ குடும்பத்து நகைகளும் பயன்படுத்தப்படும்.
Image: Royal Collection Trust
ஆனால் தற்போது பிரித்தானியாவின் வருங்கால ராணியார் கமிலா பயன்படுத்த முடிவு செய்துள்ள ஒரு நகையால் பலரது எதிர்ப்பை சம்பாதிப்பார் என்றே கூறப்படுகிறது. அதில் வேல்ஸ் இளவரசர் வில்லியமும் ஒருவர், இவரே அந்த நகையை இனி பாதுகாப்பது முறையாகாது, அழிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருபவர்.
முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய உடையில் இருக்கும் சார்லஸ் மன்னர், உரிய ஆபரணங்கள் மற்றும் மன்னருக்கான குறிப்பிட்ட அடையாளங்களையும் தம்முடன் ஊர்வலத்தில் எடுத்துச் செல்வார்.
அந்த வகையில் ராணியார் கமிலாவும் கோஹினூர் வைரம் அகற்றப்பட்ட, ராணியார் மேரி பயன்படுத்திய கிரீடத்தை அணிய இருக்கிறார். அத்துடன், 1600களில் உருவாக்கப்பட்ட சமத்துவத்தையும் கருணையையும் குறிக்கும் தந்தத்தாலான தடி ஒன்றையும் ராணியார் பயன்படுத்த உள்ளார்.
அனைத்து பொருட்களையும் அழிக்க வேண்டும்
தற்போது இது தொடர்பிலேயே கடும் விவாதம் எழுந்துள்ளது. 2014ல் இந்த தடி உட்பட அரண்மனையில் எஞ்சியுள்ள தந்தத்தாலான அனைத்து பொருட்களையும் அழிக்க வேண்டும் என இளவரசர் வில்லியம் அறிவித்திருந்தார்.
@getty
ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதுவரை அழிக்கப்படவில்லை. இருப்பினும் அரசியல் வட்டாரத்தில் இருந்து அவருக்கு ஆதரவு கிடைத்திருந்தது. 2013ல் குழு ஒன்றை நிறுவிய இளவரசர் வில்லியம், தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் கோரிக்கையை முன்வைத்தார்.
யானைகளின் தந்தத்திற்காக ஆண்டு தோறும் 20,000 யானைகள் கொல்லப்படுகிறது. தற்போது கமிலா தமது முடிவில் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் வில்லியம் என்ன முடிவெடுப்பார் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும் என்றே கூறப்படுகிறது.