மன்னர் சார்லசின் முதல் காதலி கமீலாவா?: கமீலாவை சார்லசிடம் அறிமுகப்படுத்திய அவரது முதல் காதலி இவர்தான்...
இன்று பிரித்தானிய மன்னராகியிருக்கும் இளவரசர் சார்லசின் காதல்களைக் குறித்தே ஒரு புத்தகம் எழுதலாம்.
கமீலாவுக்கு முன்பே சார்லஸ் காதலித்த ஒரு பெண்ணைக் குறித்ததுதான் இந்த செய்தி.
இன்று பிரித்தானிய மன்னராகியிருக்கும் இளவரசர் சார்லசின் காதல்களைக் குறித்தே ஒரு புத்தகம் எழுதலாம்...
அத்தனை பேரை காதலித்திருக்கிறார் சார்லஸ்!
image: Evening Standard/Hulton Archive/Getty Images
அதிலும், இன்று மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலாவை சார்லசுக்கு அறிமுகம் செய்ததே அவரது முதல் காதலிதானாம்...
சிலி நாட்டுத் தூதரான Victor Santa Cruz என்பவரின் மகளான லூசியா (Lucia Santa Cruz) என்பவர்தான் சார்லசின் முதல் காதலியாம். வரலாற்றில் ஆர்வம் கொண்ட இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள, தன் தாயிடம்கூட லூசியாவை அறிமுகம் செய்து வைத்தாராம் சார்லஸ்.
ஆனால், இருவரும் வெவ்வேறு சபைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களென்பதால், லூசியாவை மணந்தால் சார்லஸ் மன்னர் பதவியில் இருக்கமுடியாது என்பதால் அந்தக் காதல் ஆரம்பத்திலேயே முடிந்துபோயிருக்கிறது.
image: Mirrorpix
காதல் முடிந்துபோனாலும் அவர்களுடைய நட்பு நீண்ட காலம் நீடித்ததாம். சொல்லப்போனால், 1970ஆம் ஆண்டு தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சார்லசை அழைத்திருந்தாராம் லூசியா. அதே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த மற்றொரு நபர் கமீலா!
அந்த நிகழ்ச்சியில்தான் சார்லஸ் கமீலாவை முதன்முதலில் சந்தித்தாராம். ஆனால், பலரும் கமீலாவும் சார்லசும் போலோ விளையாட்டுப் போட்டி ஒன்றில் சந்தித்ததாகக் கூறுகிறார்கள். எது உண்மை என்பதை சார்லசோ கமீலாவோ சொன்னால்தான் உண்டு.
லூசியாவும் ஒரு பல்கலைப் பேராசிரியராகி, பலபுத்தகங்களை எழுதி, சிலி நாட்டு தேசிய தொலைக்காட்சி இயக்குநரான Juan Luis Ossa என்பவரை திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகி, தனது 77ஆவது வயதில் மரணமடையும் வரை சார்லசுக்கும் கமீலாவுக்கும் நல்ல நண்பராகத் திகழ்ந்தாராம்.
image: Getty
image: Getty
image: Getty
image: Getty