இளவரசி கேட் குடும்பத்தினரால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டேன்: உள்ளாடையுடன் இளம்பெண் வெளியிட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் மிடில்டனின் குடும்பத்தினரால், தான் ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
இளம்பெண்ணின் போஸ்டரால் சர்ச்சை
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனில் பெற்றோரான கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் ஆகியோர் Bucklebury என்னும் கிராமத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
Credit: SUPPLIED
இந்நிலையில், கரோல், மைக்கேல் தம்பதியர், அவர்களுடைய பிள்ளைகளான பிப்பா மிடில்டன் ஆகியோர் வாழும் வீடுகளைச் சுற்றி, மூன்று மைல் சுற்றளவில் ஒரு இளம்பெண், உள்ளாடையுடன் காணப்படும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, எனது இந்த நிலைக்கு இளவரசி கேட்டின் பெற்றோர்தான் காரணம் என்று கூறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பின்னணி
அதாவது, இளவரசி கேட்டுடைய பெற்றோர், Party Pieces firm என்னும் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார்கள். அந்த நிறுவனம் நஷ்டத்திற்குள்ளானதால் அவர்கள் அதை விற்றுவிட்டார்கள்.
Credit: Mega
அந்த நிறுவனத்தை நம்பி பல சிறிய நிறுவனங்கள் இயங்கிவந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கேட்டுடைய பெற்றோர் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்றும், அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, வருவாய்க்காக ஆபாச இணையதளம் ஒன்றிற்கு போஸ் கொடுத்து வாழவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Molly (23) என்னும் இளம்பெண்.
Credit: INSTAGRAM/MOLLYBRASHMODEL
ஆகவேதான், தான் தனது நண்பர்கள் உதவியுடன் கேட்டுடைய பெற்றோர் வாழும் பகுதியில் இத்தகைய போஸ்டர்களை ஒட்டக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Molly.
Credit: Getty
கேட்டுடைய பெற்றோர் சிறு நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் Molly.
Credit: Alamy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |