கூடார முகாம் மீது பாய்ந்த கார்: பிரித்தானியாவில் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம்
பிரித்தானியாவின் பெம்ப்ரோக்க்ஷயர் அமைக்கப்பட்டு இருந்த கூடார முகாம் மீது கார் ஒன்று உருண்டு வந்து மோதியதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
9 பேர் வரை படுகாயம்
பெம்ப்ரோக்க்ஷயரின் நியூகேல்(Newgale) சாலையில் பல்வேறு மக்கள் குழுக்களால் அமைக்கப்பட்டு இருந்த கூடார முகாம் மீது ஃபோர்டு ஃபீஸ்டா கார் ஒன்று சனிக்கிழமை இரவு உருண்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 9 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நியூகேல் கேம்ப்சைட்டின் உரிமையாளர் மைக் ஹாரிஸ் இந்த சம்பவம் தொடர்பாக வழங்கியுள்ள தகவலில், குழந்தை ஒன்று பலத்த காயங்களுடன் உயிர் தப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கார் விபத்து சரியாக 22:30 மணியளவில் ஏற்பட்டு இருப்பதாகவும், காரில் இருந்த பயணிகளும் இதில் காயமடைந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உருண்டு விழுந்த கார்
இந்நிலையில் மைக் ஹாரிஸின் மனைவி கிளேர், மலையில் இருந்து கார் கீழே இறங்கிய போது முடிந்தவரை அதை நிறுத்த போராடினார்கள், ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென கவிழ்ந்துடன் இரண்டு மூன்று முறை உருண்ட பிறகு கூடார முகாம் மீது வந்து மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக கூடார முகாமில் இருந்த குழந்தை ஒன்று உயிர் பிழைத்தது என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Pembrokeshire,Newgale,car crash, Campsite