மூன்றே நாட்களில் வயிற்று புண்ணை எளிய முறையில் போக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியம்!
வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக வருகின்றது. அதில் குறிப்பாக வயிற்றுப்புண் முக்கியமானதாகும்.
இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்ஸைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவதால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் வயிற்று புண்ணை எளியமுறையில் நீக்க கூடிய ஒர் அற்புத வீட்டு வைத்தியம் ஒன்றை தற்போது இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- மணத்தக்காளி சாறு 50 மில்லி
- தேங்காய்ப்பால் 50 மில்லி
- வறுத்த கசகசா பொடி 3 கிராம்
செய்முறை
இவைகளை ஒன்றாக கலந்து முப்பது நிமிடம் அப்படியே வைத்திருந்து அதன் பின்னால் குடித்து வரவேண்டும்.
வாயிலிருந்து உணவு பாதை முழுவதும் தோன்றுகின்ற அனைத்து புண்களும் ஆறும்.
வாயின் உட்புற தசைகளில் அண்ணாக்கின் மேலே தோன்றுகின்ற தீராத நீண்ட நாள் புண்களும் இதை பருகினால் மூன்றே நாட்களில் குணமாகும் அல்சர் நோய் தீருவதற்கு ஒரு அற்புதமான மருந்து.
இது காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். தயிர் மோர் சேர்த்து கொள்ளலாம்.