இரவில் AC மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக பயன்படுத்தலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
இரவில் AC பயன்படுத்தும் போது சீலிங் ஃபேனையும் சேர்த்து பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
சில வீடுகளில் ஏசி மற்றும் சீலிங் ஃபேன் இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்த கூடாது என்ற தவறான தகவல் உள்ளது.
உண்மையிலேயே நீங்கள் ஃபேன் மற்றும் ஏசியை ஒன்றாகப் பயன்படுத்தும் போது அறையின் வெப்பநிலை விரைவாக வெளியேறி குளிர்ச்சியை தருகிறது.
ஏசியுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது அது அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி காற்றைச் செலுத்த உதவுகிறது. இதனால், நீங்கள் ஏசி வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்க தேவையில்லை. இதனால் 12–20 சதவீதம் வரை மின் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்.
குறிப்பாக நீங்கள் ஏசியுடன் பேனையும் சேர்த்து பயன்படுத்தும் போது 18 அல்லது 20 டிகிரியில் வெப்பநிலையை வைக்க தேவையில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் 24 டிகிரியில் வைத்தால் கூட உடனடி கூலிங் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |