மழை பெய்யும் போது AC பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுமா?
மழை பெய்யும் AC பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்து தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தற்போது கோடை காலம் நடைபெற்று கொண்டிருப்பதால் பெரும்பாலான வீடுகளில் AC இல்லமால் இருக்க முடிவதில்லை. ஆனாலும், கோடை மழை சில இடங்களில் பெய்து கொண்டிருப்பதால் குளிர்ச்சியான சூழலும் நிலவுகிறது.
மழை, இடி, மின்னல் நேரங்களில் AC பயன்படுத்தினால் என்ன ஆகும், ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி பார்க்கலாம்.
AC பயன்படுத்தலாமா?
உங்களது AC எந்த வகையாக இருந்தாலும் லேசான மழை பெய்யும் போது பயன்படுத்தினால் ஆபத்து இல்லை என்று சொல்கிறார்கள்.
அதாவது, அப்போது வெளிப்புற ஏசி யூனிட்/அலகுகளில் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகள் சுத்தப்படுத்தி விடும் என்கின்றனர்.
இதுவே கனமழை பெய்யும் நேரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் AC வெளிப்புற அலகு நேரடியாக மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த நேரத்தில் தாங்கக்கூடிய அளவுக்கு ஏசியின் வெளிப்புற அலகுகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் சிறிதளவு சேதத்தை சந்திக்கும். இதனால், மழையால் பாதிக்காத இடத்தில வெளிப்புற அலகை வையுங்கள்.
உங்களது வீடு அந்த மாதிரியான அமைப்பில் இல்லையென்றால் கனமழை காலங்களில் AC பயன்படுத்தாமல் இருங்கள்.
குறிப்பாக மழை காலத்தில் வயரிங்கில் சிக்கல் இருந்தால், ஏசியை அணைத்துவிட்டு, வயரிங் அமைப்புகளை சரி செய்த பின்னர் பயன்படுத்துங்கள்.
ஏனென்றால் மழை காலங்களில் ஏசியை இயக்குவது சில விளைவுகளை ஏற்படுத்தும். அப்போது, ஏசி வழக்கத்தை விட வேகமாக வெப்பம் அடையலாம். அதாவது ஏர் கண்டிஷனர் சுருள்கள் ஈரமாகிவிடுவதால், அதிகமாக சுழன்று இயங்க வேண்டியிருக்கும்.
இதைத்தவிர மழையின் போது ஏசி மூலம் தண்ணீர் வீட்டிற்குள் வர வாய்ப்பு உள்ளது. இதனால், அதிக மழை மற்றும் புயல் நேரங்களில் ஏசியை இயக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |