ஒரே நாளில் முகப்பருவை போக்கனுமா? இதோ அட்டகாசமான டிப்ஸ்!
Skin Cancer
By Kishanthini
பொதுவாகவே முகப்பருக்கள் எப்போதுமே பிரச்சனை தரக்கூடியவை தான்.
இதிலிருந்து சருமம் முழுமையாக விடுபட வேண்டும் என்றால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். விலை உயர்ந்த க்ரீம் வகைகளாக இருந்தாலும் கூட அவை முகப்பருக்களை மீண்டும் உண்டாக்கிவிடுகிறது.
அதே நேரம் இயற்கையான முறையில் பராமரிப்பு மேற்கொள்ளும் போது அது சருமத்திலிருந்து முகப்பருவை வேரோடு அகற்றப்படுவதோடு சருமத்தை சுத்தமாகவும் வைத்திருக்க செய்கிறது.
அந்தவகையில் தற்போது முகப்பருவை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்று இங்கே பார்ப்போம்.
- முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும்.
- டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்துவிட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.
- க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.
- சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.
- தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.
- வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.
- ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US