தினமும் கேரட் ஜூஸ் தவறாமல் குடிச்சா உடல் எடை குறையுமா?
பொதுவாக கேரட் ஜூஸ் ஒரு கலோரி குறைந்த பானமாகும். இந்த கேரட் ஜூஸை தவறாமல் குடித்து வரும் போது மெட்டா பாலிசம் துண்டப்பட்டு எடையை குறைக்க முடிகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
எனவே கேரட் ஜூஸை தினசரி குடித்து வந்தால் உங்க தொப்பை கொழுப்பை குறைக்க முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அந்தவகையில் கேரட் ஜூஸ் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகினறது என்பதை தெரிந்து கொள்வோம்.
எப்படி எடையை குறைக்க உதவுகிறது ?
- கேரட் ஜூஸ் உடல் மெட்டா பாலிசத்தை தூண்டி உடற்பயிற்சி செய்யும் திறனை அதிகரிக்கிறது இதன் மூலம் அதிகப்படியான தேவையற்ற கொழுப்பை உங்களால் குறைக்க முடியும்.
- இதில் கேரட்டில் உள்ள விட்டமின் பி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. விட்டமின் பி கொழுப்பு மற்றும் புரோட்டீன் மெட்டபாலிசத்திற்கு உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
- தசை கட்டுமானத்திற்கு உதவுகிறது. கேரட் ஜூஸில் விட்டமின் பி வகைகளான விட்டமின் பி1, பி2 மற்றும் பி6 போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
- ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடிக்கும்போது அதிகமான நார்ச்சத்துக்கள் உங்க உடலுக்கு கிடைக்கிறது. இது செரிமானத்திற்கு போதுமான அளவு உதவுகிறது.
- கேரட் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் நிறைய தாதுக்கள் காணப்படுகிறது. இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் காணப்படுகிறது. இது கொழுப்பை எரிக்கவும், ஆரோக்கியத்திற்கு உதவவும் உதவுகிறது.
வேறு நன்மைகள்
கேரட் ஜூஸ் உங்க எடையை குறைக்க உதவுவதோடு கண் ஆரோக்கியத்திற்கும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தி செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றது.
ம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பொலிவான சருமம் பெற, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, வாய் வழி ஆரோக்கியத்திற்கும், இதந பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களுக்கும் உதவுகிறது.