நீரழிவு நோயை சியா விதைகள் கட்டுப்படுத்துமா? ஆய்வு கூறுவது என்ன?
பொதுவாக சியா விதைகள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்ககூடியவை.
தற்போது பல வகையான உணவு பொருட்களிலும் சியா விதைகள் சேர்க்கப்படுகின்றன.
அப்படி சியா விதைகளை உணவில் சேர்ப்பது நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்தவகையில் சியா விதைகள் நீரழிவு நோயை எப்படி கட்டுப்படுத்துகின்றது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுமா?
சியா விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என்று விலங்குகள் மீதான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவதாக பல ஆராய்ச்சிகளும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளன.
ஆய்வு கூறுவது என்ன?
2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், சியா விதைகள் இல்லாமல் ரொட்டி சாப்பிடுவதை விட, சியா விதைகளுடன் ரொட்டி சாப்பிடுவது, ஆரோக்கியமான நபர்களின் உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
வேறு நன்மைகள்
- நார்ச்சத்து சாப்பிடுவது அதிக எடை மற்றும் உடல் பருமனை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- சியா விதைகளில் உள்ள புரதம் பசியின்மை மற்றும் உணவு உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது.
- சியா விதைகளை உட்கொள்ளும் போது கிடைக்கும், அதிக நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 உள்ளடக்கம் காரணமாக இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றது.
- சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.