உடல் எடையை குறைக்க கொய்யாப்பழம் உதவுமா? வேறு என்ன நன்மைகள் உண்டு?
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன.
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.
மேலும், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பழம் மட்டுமல்லாமல், இலை, பட்டை என அனைத்திலும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. தற்போது இது எப்படி உதவுகின்றது? வேறு என்ன நன்மைகள் உண்டு என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி எடை இழப்புக்கு உதவுகிறது?
கொய்யாப்பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. எனவே செரிமானம் அடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. பசி உணர்வை கட்டுப்படுத்துவதால் அடிக்கடி பசிக்காது.
கொய்யாப்பழத்தில் கலோரிகள் குறைவாக இருந்தால் கூட இதில் புரதங்கள், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வேறு நன்மைகள்
- உடலில் ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்த இது ஒரு சிறந்த பழமாகும். எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் மற்றும் எடையை பராமரிக்க விரும்புபவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
- கொய்யாப்பழத்தில் நிறைய மாங்கனீஸ் சத்துக்கள் காணப்படுகிறது. எனவே மற்ற உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச இது உதவுகிறது. இதனால் உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாது.
- கொய்யாப்பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்க குடல் ஆரோக்கியத்திற்கும் சீரண சக்திக்கும் உதவுகிறது.
- கொய்யாப்பழத்தில் விட்டமின் சி, லைக்கோபீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது உங்க சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.இதிலுள்ள போலேட் சத்து கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.