பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்குமா?
பொதுவாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது, உடலை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
இதில் பலகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
குறிப்பாக இதில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. இதனால் இது கொலஸ்ரால் உள்ளவர்களுக்கு உதவுகின்றது என்று கூறப்படுகின்றது.
உண்மையில் பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுமா? இல்லையா என்பதை பார்ப்போம்.

Image Credit: Brent Hofacker/Shutterstock.com  
கெட்ட கொலஸ்ட்ராலை பேரிச்சம் பழம் குறைக்குமா?
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உணவுகளின் மூலம் எளிதில் சரிசெய்ய முடியும். குறிப்பாக பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் சிறந்தது.
அதோடு இது இரத்தக் குழாய்களை சுத்தம் செய்கிறது மற்றும் இதயத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்களை விலக்கி வைக்கிறது.
எனவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அது இரத்த கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க உதவுகிறது.
ஏனெனில் பேரிச்சம் பழத்தில் கொலஸ்ட்ரால் ஏதும் இல்லை. அதோடு பேரிச்சம் பழம் பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்?
 ஒரு நாளைக்கு 5-6 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும். பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அதிகளவு இருப்பதால், இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        