நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கனுமா?அப்போ காலையில் வெறும் வயிற்றில் இதை ஒரு டம்ளர் குடிங்க!
சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க ஆயுர்வேதத்தில் பல மூலிகைகள் உண்டு அதில் ஒன்று வேங்கை.
இது ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரை அளவை பரவலாக கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
அதிலும் பழங்காலத்தில் ஆயுர்வேதத்தில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதன் கட்டைகள் அல்லது வேங்கை மரத்தின் துண்டுகளை பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
தற்போது இது பொடி, மாத்திரைகள் வடிவில் கிடைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேங்கையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
- வேங்கை மர டம்ளர்கள் கிடைக்கும். இந்த மர டம்ளரை வாங்கி இரவில் டம்ளரில் சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- டம்ளர் தண்ணீர் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறி நடுநிலை சுவையுடன் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.
- வேங்கை மரத்தில் செய்யப்பட்ட டம்ளர்கள் 40- 45 நாட்கள் வரை நீடிக்கும்.
- வேங்கை மரத்தின் துண்டு ஒரு பகுதியை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம். மாத்திரைகள் மற்றும் தண்ணீருடன் தூள் வடிவில் வேங்கை சேர்க்கலாம்.
- நீரிழிவு நோயாளியாக இருந்தால் மருந்துகள் எடுக்கும் போது மருத்துவருடன் ஆலோசியுங்கள். ஏனெனில் மருந்துகளுடன் வேங்கை சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.